சாலை வசதியின்றி அவதிப்படும் மலை கிராம மக்கள்; சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்

2 hours ago
ARTICLE AD BOX

கோவை மாவட்டம், மேட்டுப்பாளைம் அருகே சாலை வசதி இல்லாத காரணத்தினால் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை ஊராட்சியில் கடமான்கோம்பை, நீராடி, பரளிக்காடு, கீழ் பில்லூர், மேல் பில்லூர், செங்கலூர், சேத்துமடை, தோண்டை, பூச்சமரத்தூர், சிறுகிணறு, வீரக்கல் மற்றும் கோரப்பதி உள்ளிட்ட பல கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லை எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடமான்கோம்பையை சேர்ந்த மணி என்பவர் பில்லூர் அணைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, உடற்கூராய்வு நடத்தப்பட்டு அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலமாக கடமான்கோம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, நீராடியில் இருந்து கடமான்கோம்பை பகுதிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.

Advertisment
Advertisement

இதனால், சுமார் 3 கி.மீ தொலைவிற்கு மணியின் உறவினர்கள் அவரது சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்றனர். இச்சம்பவத்தை அப்பகுதி இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளைம் அருகே சாலை வசதி இல்லாத காரணத்தினால் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.#Coimbatore pic.twitter.com/qAPukc1Q8v

— Indian Express Tamil (@IeTamil) February 24, 2025
Read Entire Article