டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது.. கடன் எவ்வளவு?

4 days ago
ARTICLE AD BOX

டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது.. கடன் எவ்வளவு?

Delhi
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மாநில முதல்வராகும் பாஜகவின் முக்கிய தலைவரான ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் முறை எம்எல்ஏவான ரேகா குப்தா கவுன்சிலராக வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கே முதல்வராகி இருக்கிறார். ரேகா குப்தா பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இங்கு பாஜக 70 இடங்களில் 48 இடங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் (AAP) 10 ஆண்டு கால ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

Delhi Chief Minister Rekha Gupta

ரேகா குப்தா யார் மற்றும் அவரது அரசியல் பயணம்

ரேகா குப்தா 1974 இல் ஹரியானா மாநிலத்தில் உள்ள நந்த்கரில் பிறந்தார். ரேகா குப்தாவுக்கு இரண்டு வயதாக இருந்த போதே அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. அவர் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முழுமையாக படித்தார் . டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக மாணவ பருவத்திலேயே போட்டியிட்டு வென்று அரசியலில் நுழைந்தார்.

தற்போது சாலி மார் தொகுதியில் ஆம் ஆத்மியின் பந்தனா குமாரியை எதிர்த்து போட்டியிட்டு 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அரசியலில் திருப்புமுனையை எற்படுத்தினார். 27 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக மீண்டும் தற்போது ஆட்சிக்கு வந்ததில் களவேலைகளை பார்த்ததில் ரேகா குப்தாவும் ஒருவர் என்பதால் பாஜக மேலிடம் முக்கியத்துவம் தந்துள்ளது.

ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரமாண பத்திரத்தில், ரேகா குப்தா தனது சொத்தின் நிகர மதிப்பு சுமார் ₹5.31 கோடி (தோராயமாக $640,000) என கூறியுள்ளார். மேலும் அவர் சொத்து மதிப்புடன் கடன் பற்றியும் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். ரேகா குப்தாவிற்கு கடன்கள் சுமார் ₹1.20 கோடி (சுமார் $145,000) என்று கூறியுள்ளார்.

மொத்த சொத்துக்கள்: ₹5,31,34,981 (₹5.3 கோடி)
மொத்த பொறுப்புகள்: ₹1,20,33,720 (₹1.2 கோடி)
நிகர மதிப்பு: ₹4,11,01,261 (₹4.1 கோடி)

ரோக குப்தாவிற்கு ஆண்டு வாரியான வருமானங்கள்

2023-2024: ₹6,92,050
2022-2023: ₹4,87,850 )

2021-2022: ₹6,51,771

2020-2021: ₹6,07,910

2019-2020: ₹5,89,710

கவுன்சிலர் டூ முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா.. டெல்லியின் புதிய முதல்வர் குறித்து ஆச்சரியமான தகவல்
கவுன்சிலர் டூ முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா.. டெல்லியின் புதிய முதல்வர் குறித்து ஆச்சரியமான தகவல்

ரேகா குப்தாவின் கணவரின் வருமானம்

2023-2024: ₹97 லட்சம்

2022-2023: ₹64 லட்சம்

டெல்லியின் நான்காவது பெண் முதல்வராகும் ரேகா குப்தா

ரேகா குப்தா டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக பொறுப்பேற்கிறார். டெல்லி மக்களுக்கு மாற்றத்தை வழங்கக்கூடிய ஒரு திறமையான தலைவராக ரேகா குப்தா தன்னை நிரூபிப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே, டெல்லியில் அரசியல் காட்சிகள் சட்டென வேகமாக மாறி வருகின்றன. ரேகா குப்தா டெல்லியின் நிதி நிர்வாகம் மறறும் உள்கட்டமைப்பு, கல்வி சீர்திருத்த மற்றும் சுகாதார சேவைகள் உள்பட பல்வேறு விஷயங்களை எப்படி கையாள போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சாதாரண கவுன்சிலராக இருந்தவர் டெல்லி முதல்வராக மாறியிருப்பதை அம்மாநில மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

More From
Prev
Next
English summary
Information has been released about the net worth of Delhi Chief Minister and BJP leader Rekha Gupta. Rekha Gupta, a first-time MLA, started her career as a councilor and became the Chief Minister of the capital of India, Delhi. Let's see about Rekha Gupta in this post.
Read Entire Article