டெல்லி தேர்தல் பாஜகவுக்கு கை கொடுத்தது எது?

3 hours ago
ARTICLE AD BOX

டெல்லி சட்டசபை தேர்தல்

டெல்லி சட்டசபையின் ஆட்சிக்காலம் இந்த மாதம் 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால் கடந்த மாதம் தேர்தல் ஆணையம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்தது. அதன்படி 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மேலும் டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. டெல்லி சட்டசபைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அதிஷி ஆகியோர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதில் பெரும்பாலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகியுள்ளதால், ஆட்சி மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கருத்து கணிப்பு முடிவுகள்

டைம்ஸ் நவ்

பாஜக 37-43

ஆம் ஆத்மி 32 - 37

காங்கிரஸ் 0 - 2

என்டி டிவி

பாஜக 51 - 60

ஆம் ஆத்மி 10 - 19

காங்கிரஸ் 0 - 2

சிஎன்என்

பாஜக 40

ஆம் ஆத்மி 30

காங்கிரஸ் 2

மேட்ரிஸ் (Matrize)

பாஜக 35 - 40

ஆம் ஆத்மி 32 - 37

காங்கிரஸ் 0 - 1

ரிபப்ளிக்

பாஜக 35 - 40

ஆம் ஆத்மி 10 - 19

காங்கிரஸ் 0

பி-மார்க்

பாஜக 39 - 49

ஆம் ஆத்மி 39 - 49

காங்கிரஸ் 0 - 1

பாஜகவுக்கு கை கொடுத்தது எது?

டெல்லியில் நடைபெறும் ஆத் ஆத்மி ஆட்சியில் ஏற்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, மற்றும் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடிய உள்ளிட்ட தலைவர்கள் சிறை சென்றது இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பலவித இன்னல்களை சந்தித்து கொண்டிருந்த வேளையில் அப்போதைய டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பல கோடி ரூபாய் மதிப்பில் தன்னுடைய வீட்டை அழகுப்படுத்தியது பெரும் சர்ச்சையானது. 

முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு இருந்த ஆதரவு தற்போது குறைந்துள்ளது பாஜகவுக்கு மேலும் வலுசேர காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வர சிறுபான்மையினரே காரணமாக அமைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ள வேயைில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தற்போதைய கருத்து கணிப்பு கூறுகிறது. பாஜக  டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

Read Entire Article