டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி?

15 hours ago
ARTICLE AD BOX

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் சிவானி (வயது 13). அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் நிரஞ்சனா (11) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் மாணவி சிவானி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 7-ந் தேதி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் பரிதாபமாக உயிரிழ்ந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி? appeared first on Rockfort Times.

Read Entire Article