டிவி ரிமோட் சண்டையில் துயரம்; பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.!

9 hours ago
ARTICLE AD BOX

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் தங்கியிருந்த தம்பதிகள், மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் ராயத்தூர்க்கம் பகுதியில் அறையெடுத்து தங்கி இருந்தனர்.

தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனிடையே, பெண் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: திருநங்கையுடன் காதல்.. திருமணம் கைகூடுவதற்குள் இளைஞர் விபரீதம்.!

பெண் தற்கொலை

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, தம்பதிகள் 6 மாதங்களுக்கு முன்னர் தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கோவாவில் திருமணம் நடைபெற்றது.

தர்பூது இருவருக்கும் இடையே டிவி ரிமோட் தொடர்பான பிரச்சனை எழுந்து, அது வாக்குவாதமாகி, கணவர் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் மறுநாள் அவர் வந்தபோது, பெண் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது" என கூறுகின்றனர். அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூக்கில் துள்ளத்துடித்த உயிர்.. 5 நிமிடத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!

Read Entire Article