'டிராகன்' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு..!

3 days ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகை பொருத்தவரை, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் ஐந்து காட்சிகள் திரையிடப்படும். மேலும், தமிழக அரசு கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கும் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவரின் படங்கள் வெளியாகும் போது, தமிழக அரசு சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கும் அறிவிப்பை வெளியிடும்.

அதை தொடர்ந்து, நாளை பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டிராகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கும் சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடலாம் என்றும், இரவு காட்சியை 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ’டிராகன்’ திரைப்படம் நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தமிழகத்தில் ஆரம்பமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article