ARTICLE AD BOX
டிராகன் vs NEEK … வெளியான முதல் நாள் வசூல் விவரம்., பந்தயத்தை அடித்தது யார்??
இன்றைய காலகட்டத்தில் ஒரே நாளில் மூன்று அல்லது 4 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கி உள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இதில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்கள் நேற்று (பிப்ரவரி 21) வெளியாகின.
தற்போது இந்த படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டிராகன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் NEEK திரைப்படம் ரூபாய் 2 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post டிராகன் vs NEEK … வெளியான முதல் நாள் வசூல் விவரம்., பந்தயத்தை அடித்தது யார்?? appeared first on EnewZ - Tamil.