டிராகன் 100 கோடி கான்பார்ம்.. அடுத்த சிவகார்த்திகேயனாக மாறும் பிரதீப் ரங்கநாதன்!

3 days ago
ARTICLE AD BOX

டிராகன் 100 கோடி கான்பார்ம்.. அடுத்த சிவகார்த்திகேயனாக மாறும் பிரதீப் ரங்கநாதன்!

News
oi-Jaya Devi
| Published: Friday, February 21, 2025, 17:08 [IST]

சென்னை: கோமாளி படத்தை இயக்கியதன் மூலம், திரைத்துறைக்கு வந்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்ததை தொடர்ந்து, டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். காதலர் தினத்தையொட்டி வெளியாக வேண்டிய டிராகன் படம் விடாமுயற்சி ரிலீஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி வருவதால், படம் நிச்சயம் நல்ல வசூலை அள்ளும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கல்லூரியில் கெத்து மாணவனாக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன், மாணவர்களுடன் கூத்து அடித்துக்கொண்டு படிப்பை கோட்டை விட்டு, 48 அரியரை வைத்து இருக்கிறார். இதனால், கல்லூரி நிர்வாகம் அவரை வெளியேற்றி விடுகிறது. படிப்பு இல்லாமல் பிரதீப் ரங்கநாதன் என்ன செய்யப்போகிறான், அவன் எதிர்காலம் என்னவாகும், என்ன செய்யப் போகிறான் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தில் ஒரு ட்விஸ்டை வைத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத், அதாவது படித்த மாணவர்களே வேலையில்லாமல் திண்டாடும்போது தனது திறமையால் கை நிறைய சம்பாதிக்கும் ஒரு இளைஞராக மாறுகிறார் பிரதீப்.

Dragon Pradeep Ranganathan Ashwath marimuthu

நல்ல கருத்துள்ள படம்: படிப்புக்கும் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதே போல பணம் சம்பாதிப்பதற்கு படிப்பு ஒன்றும் தேவையில்லை என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல காட்சிகள் நமக்கு தெரிந்த காட்சிகளாக இருந்தாலும், திரைக்கதையில் புத்திசாலித்தனத்தை காட்டி ரசிகர்களிடம் அப்ளாசை அள்ளி இருக்கிறார் இயக்குனர் அஸ்வந் மாரிமுத்து. தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். காமெடிக்கு காமெடி, கருத்துக்கு கருத்து, சென்டிமெண்டுக்கு சென்டிமெண்ட் என அழகாக கதையை நகர்த்தி சென்ற இயக்குனருக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வர, லவ் டுடே படத்தில் வேறு விதமாக தெரிந்த பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நடிப்பில் மேலும், மெரூகூட்டி, அட்டகாசமான ஒரு நடிப்பை கொடுத்து இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

100 கிளாப்பில்: மக்களின் மனம் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வரும், அடுத்த சிவகார்த்திகேயன் யார் என்பதில் பல போட்டிகள் நிலவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் இந்த போட்டியில், டிராகன் படத்தின் வெற்றியின் மூலம் களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் இன்று வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு மக்களிடமிருந்து நல்ல விமர்சனம் வரவில்லை. ஆனால், டிராகன் படத்தை இளசுகள் கொண்டாடி வருவதால், லவ் டுடே படத்தைப் போல இந்த திரைப்படமும் நிச்சயமாக 100 கோடி கிளப்பில் இணையும் என்று கருத்துக்கள் பரவி வருகிறது

இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் நடித்துள்ளனர் மேலும், கௌதம் வாசுதேவ் மேனன்,சினேகா, மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிகேத் பொம்மிரட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்..

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Pradeep Ranganathan's Dragon movie will soon cross 100 crores, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருவதால், படம் விரைவில் 100 கோடியை தாண்டும் என நம்பப்படுகிறது
Read Entire Article