ARTICLE AD BOX
Ritika Singh: ஆத்தாடி இடுப்பா இது...என்ன ஆட்டு ஆட்டுறாங்க..வேட்டையன் பட நடிகையின் ஓவர் அட்ராசிட்டி!
சென்னை: குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வரும் இவர், இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் படு பயங்கரமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போய் உள்ளனர்.
க்யூடான அழகு, சுருட்டை முடியுடன் இறுதிச்சுற்றில் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ரித்திகா சிங். அந்த படத்தில் நடிகர் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். குத்துச்சண்டை வீராங்கனியாக இருந்த போதும், எனக்கு பாக்ஸிங் மட்டும் இல்லை, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்திருந்தார். அந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படி இருந்ததால், ரித்திகாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ரித்திகா சிங்: அதன்பின், ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா படத்திலும் பேயாக நடித்திருந்தார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் க்யூட்டான தோழியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்,
இன் கார், கொலை, மழை பிடிக்காத மனிதன், King of Kotha என்ற மலையாளப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் காவல் துறை அதிகாரியாக படம் முழுக்க ரஜினியுடன் வந்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்றது.
இணையத்தில் படு ஆக்டிவ்: பாக்ஸிங் சாம்பியனாக இருந்தாலும், நடிகையான பின்னர் தனது அட்டகாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வரும் ரித்திகா சிங், இணையத்தில் படுஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது ரசிகர்களை மகிழ்விக்க அட்டகாசமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது, இடுப்பை வளைத்து நெளித்து செமயாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள். ஆத்தாடி இடுப்பா இது...என்ன ஆட்டு ஆட்டுறாங்க கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.