டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் புரோமோ!

3 hours ago
ARTICLE AD BOX

சந்தானத்தின் புதிய படத்திற்கு நடிகர் ஆர்யா பாடல் எழுதுவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.

நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது.

தற்போது, டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் இதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படிக்க: ஜன நாயகன் அடுத்த அப்டேட் எப்போது?

35 minutes ago

பிரேம் ஆனந்த இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் பாடல் வரும் பிப். 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘கிஸ்ஸா 47’ எனத் தொடங்கும் அப்பாடலை நடிகர் ஆர்யா எழுதுவது போன்ற புதிய புரோமோவை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article