டிக்கெட் விலை ரூ.3 லட்சம்; சில நொடியில் அதற்கும் பஞ்சம்: இந்தியா மோதுவதால் கடும் கிராக்கி

8 hours ago
ARTICLE AD BOX

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மோதுவதால், ரூ. 3 லட்சம் விலை டிக்கெட்டுகள் கூட சில நொடிகளில் இணையதளத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன.சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி வரும் 9ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட் விற்பனை துவங்கும் முன்பே ரூ.1.14 லட்சம் பேர் டிக்கெட்டுகளை வாங்க இணையதளத்தில் காத்திருப்பு பட்டியலில் காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இந்திய ரசிகர்களே. இணையதளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளில் அதிகபட்சமாக, ரூ. 3 லட்சம் விலையுள்ள டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்றுத் தீர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. பிரீமியம் டிக்கெட்டுகளில் ஆரம்ப விலையாக ரூ.24,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அவை அனைத்தும் சில நிமிடங்களில் விற்பனை ஆகின. மிக குறைந்த கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த, ரூ.6,000 விலை டிக்கெட்டுகளும் கண்மூடித் திறக்கும் நேரத்தில் மாயமாகின. இதையடுத்து, நேரடி விற்பனை மூலம் கிடைக்கும் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய நிலையில் ரசிகர்கள் உள்ளனர். இதுகுறித்து, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி சுபான் அஹமது கூறுகையில், ‘இந்தியா ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், விற்பனை துவங்கிய சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்து போகின்றன’ என்றார்.

The post டிக்கெட் விலை ரூ.3 லட்சம்; சில நொடியில் அதற்கும் பஞ்சம்: இந்தியா மோதுவதால் கடும் கிராக்கி appeared first on Dinakaran.

Read Entire Article