ARTICLE AD BOX
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
![டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஜாக்பாட் - பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லையாம்!](https://static-gi.asianetnews.com/images/01je0nkn86fpg1exxs2aa20shb/tamil-news---2024-12-01t140231.643.png)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
![அரசு பணியாளர் தேர்வாணையம்](https://static-gi.asianetnews.com/images/01jc7vqre9j3t8pxyp95e8v9gf/tnpsc.jpg)
அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.
![பாடத்திட்டம்](https://static-gi.asianetnews.com/images/01jc7vqqtwytnsd512zysk6ypn/tnpsc--1.jpg)
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று விளக்கம் அளித்துள்ளது.
![தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்](https://static-gi.asianetnews.com/images/01ja2sf5cv5dccvb6nxabqdvw7/tnpsc-1.jpg)
மேலும் பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது. முன்னதாக டிஎன்பிஎஸ்சியில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் தேர்வாணையம் இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.