டி20 தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா 2-ம் இடத்தில் நீடிப்பு

6 hours ago
ARTICLE AD BOX

Published : 20 Mar 2025 06:40 AM
Last Updated : 20 Mar 2025 06:40 AM

டி20 தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா 2-ம் இடத்தில் நீடிப்பு

<?php // } ?>

துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சார்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 856 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதிரடி வீரர்களான திலக் வர்மா (804), சூர்யகுமார் யாதவ் (739)ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர். இங்கிலாந்தின் பில் சால்ட் 815 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 252 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நேபாளத்தின் திபேந்திரா சிங் ஐரீ 233 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாயினிஸ் 210 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மேற்கு இந்தியத் தீவுகள் அகீல் ஹோசைன் 707 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 706 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் (705), இலங்கையின் வனிந்து ஹசரங்கா (700), ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா (694) ஆகியோர் முறை 3 முதல் 5-வது இடங்களில் உள்ளனர். மற்ற இந்திய வீரர்களில் ரவி பிஷ்னோய் (674) 6-வது இடத்திலும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் (653) புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article