ARTICLE AD BOX
இந்த ஆண்டு நடக்க இருக்கும் 18ஆவது ஐபிஎல் சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்றும், சிஎஸ்கே அணி தகுதி பெறாது என்றும் முன்னாள் ஆர்சிபி மற்றும் தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி மோத இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் தொடரின் மிக முக்கிய அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.
பலவீனமான ஒரே ஒரு அணி
தற்போது வீரர்கள் காயம் மற்றும் பௌலிங் யூனிட்டை சரியாக தேர்ந்தெடுக்காத காரணத்தினால் லக்னோ அணி மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் பலவீனமான அணியாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து பேட்டிங் யூனிட் பலமாக இருந்த பொழுதிலும் பவுலிங் யூனிட் பலம் இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலம் குறைந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் பலராலும் கண்டுகொள்ளப்படாத குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலுமே சிறந்த வீரர்களை கொண்டிருக்கிறது. இந்த முறை இவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு வந்தால் ஆச்சரியப்பட முடியாது. இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு நான்கு அணிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறாது
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே சமயத்தில் ஆர்சிபி அணியும் தகுதி பெறும் என்று நான் நினைக்கிறேன். மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நல்ல போட்டியாளராக இருக்கிறது. அடுத்து நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த நான்கு அணிகளும் என்னுடைய கணிப்பில் இருக்கின்றன”
இதையும் படிங்க : சேப்பாக் பிட்ச் ரகசியம்.. அதனால சிஎஸ்கே-ல இந்த 2 பேர் என்ன பண்றாங்கனு பாக்கணும் – எல் பாலாஜி பேச்சு
“ஆமாம் நான் சிஎஸ்கேவை பிளே ஆப் சுற்றுக்கு வைக்கவில்லை. தற்போதைய சிஎஸ்கே அணியும் வலுவான அணிதான். இது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்கலாம். இருந்தபோதிலும் நான்கு அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.
The post ஐபிஎல் 2025 இந்த 4 டீம் பிளே ஆப் போகும்.. சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு இல்ல – ஏபி டிவில்லியர்ஸ் கணிப்பு appeared first on SwagsportsTamil.