டாப் 10 ஹீரோயின் லிஸ்ட்டில் ரஷ்மிகா, நயன்தாராவுக்கு அதிர்ச்சி: முதலிடத்தில் சமந்தா!

11 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவின் டாப் 10 பிரபலமான நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். இரண்டு வருடங்களாக படங்கள் இல்லாத நடிகை முதலிடத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Top 10 Popular Actress in India : ஓர்மேக்ஸ் மீடியா ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில். பிப்ரவரி மாதத்திற்கான டாப் 10 நடிகைகள் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் நடிகை சமந்தாவுக்கு தான் முதலிடம் கிடைத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு பெரியளவில் படங்கள் இல்லாவிட்டாலும் சமந்தா முதலிடம் பிடித்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆலியா பட்

சமந்தா முதலிடம் பிடித்துள்ளது ரஷ்மிகா, த்ரிஷா, சாய் பல்லவி, நயன்தாரா ஆகியோரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பெரியளவில் படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார்.

சாய் பல்லவி

`கல்கி 2898 ஏடி` நடிகை தீபிகா படுகோன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சாய் பல்லவி நான்காவது இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருவதால் அவரைப்பற்றிய செய்திகள் அடிக்கடி உலாவுகின்றன. அதேபோல் இந்த லிஸ்ட்டில் உள்ள மற்றொரு ஆச்சர்யமான பெயர் காஜல் அகர்வால். இவர் இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். காஜலுக்கு கடந்த சில ஆண்டுகளாக படங்களே இல்லை. இருந்தாலும் அவர் பாப்புலராக இருப்பது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.

இதையும் படியுங்கள்... சகோதரர் திருமணத்தில் டான்ஸ் ஆடிய சாய் பல்லவி ! வைரல் வீடியோ

ரஷ்மிகா மந்தனா

`புஷ்பா 2`, `சாவா` படங்களின் நாயகியான ரஷ்மிகா மந்தனா தற்போது சல்மான் கானுடன் `சிக்கந்தர்` படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ரஷ்மிகா இந்த பட்டியலில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது,

திரிஷா, நயன்தாரா

அஜித்துடன் `விடாமுயற்சி` படத்தில் நடித்த த்ரிஷா இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் நடிகை நயன்தாரா எட்டாவது இடம் பிடித்துள்ளார். நயன்தாரா பற்றி அதிகளவில் செய்திகள் வந்தாலும் அவருக்கு குறைவான ரேட்டிங் கிடைத்தது ஆச்சரியமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலீலா

புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற `கிஸ்க்கு` பாடலில் கலக்கிய ஸ்ரீலீலா டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது. அதேபோல் நடிகை அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்தில் உள்ளார். இது பிப்ரவரி மாதத்திற்கான டாப் 10 நடிகைகள் பட்டியல், மார்ச் மாதம் இந்த பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பராசக்தி ஹீரோயின் ஸ்ரீலீலா பாலிவுட் நடிகரை காதலிக்கிறாரா?

Read Entire Article