டாப் 10 தமிழ் நியூஸ்: ’தமிழக மீனவர்கள் கைது முதல் திமுக மா.செ. நீக்கம் வரை!’

1 day ago
ARTICLE AD BOX

1.விசாகா கமிட்டி சீரமைப்பு 

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் இவால் உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் விசாகா கமிட்டியின் தலைவராக தொடர்வார் என அறிவிப்பு.

2.தடங்கம் சுப்பிரமணியன் நீக்கம் 

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியம் நீக்கம். அவருக்கு பதிலாக பி.தர்ம செல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமனம். 

3.தமிழ்நாடு மீனவர்கள் கைது 

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மன்னார் கடற்பரப்பு அருகே மீன் பிடித்தபோது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. 

4.”விலைவாசி உயர்வே சாதனை” 

குடிநீர் தொடங்கி டாஸ்மாக் மதுபானம் வரை எல்லாம் விலை உயர்ந்துவிட்டது; இந்த ஆட்சியின் ஒரே சாதனை விலைவாசி உயர்வுதான் என  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேச்சு. 

5.திருப்பூரில் வங்கதேசத்தினர் கைது 

திருப்பூர் மாவட்டம், கருமாரம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரான ஹுசைன் (45), இப்ராஹிம் (33) ஆகியோர் கைது.   பணியாற்றி வந்துள்ளனர்.

6.ஞானசேகரனின் ஜீப் பறிமுதல் 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல். மேலும் பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகளும் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

7. முதலமைச்சர் மருந்தகங்கள் திறப்பு 

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 24) முதலமைச்சர் மருந்தங்கள் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் 33 இடங்கள் உட்பட 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. 

8.மொழி ஒன்றும் அறிவு கிடையாது 

மொழி என்பது கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் சாதனமே தவிர, அது ஒன்றும் அறிவு கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு வாய்ப்பே இல்லை என திமுக எம்.பி கலாநிதி வீராசாமி பேச்சு. 

9.விஜய் உடன் கூட்டணியா?- என்.ஆர். பதில்

தவெக தலைவர் விஜய் எனது நண்பர், கூட்ட்ணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கருத்து. 

10.கட்டாய ஓய்வு வழங்கிய உயர்நீதிமன்றம்

மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது. குடும்பத்தினர் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். கட்டாய ஓய்வை எதிர்த்து மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி. 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
Read Entire Article