ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.எம் மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
எம் மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலங்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும், புறத்திலும் அன்பும், வீரமும் கொண்டு வாழும் நற்தமிழர் தாய் மொழி, போற்றுதலுக்குர்ய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிற மொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி! உலகமெங்கும் பரவட்டும் உயர்தனிச் செம்மொழி என உலக தாய் மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
2.அண்ணாமலை மீது அமைச்சர் விமர்சனம்
கர்நாடகாவில் போலீஸாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார். அண்ணாமலை ஒன்றும் கர்நாடக போலீஸ் கிடையாது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் உள்ள அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டு பார்க்கட்டும் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.
3. Get Out Modi vs Get Out Stalin
Get Out Modi என்ற ஹேஸ்டேக்கிற்கு பதிலாக Get Out Stalin என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார்.
4.அண்ணாமலைக்கு உதயநிதி சவால்
கேட்ட நிதியை வாங்கி தர முடியாமல் பிரச்னையை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணாமலை பக்கம் வரட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்.
5.உதயநிதிக்கு அண்ணாமலை சவால்
அண்ணா சாலையில் எந்த இடம் எனக் குறிப்பிட்டால் தனியாக வருகிறேன் என உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்.
6.ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
7. 8ஆம் ஆண்டில் மநீம
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தொடக்க விழாவை ஒட்டி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.
8. கடலூரில் முதல்வர் கள ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் ஈடுபடுகிறார். மஞ்சக்குப்பத்தில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
9. விவசாய மின் இணைப்பு பணிகளை முடிக்க உத்தரவு
விவசாய மின் இணைப்புப் பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. 2024-25ம் ஆண்டுக்குள் 15,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 11,551 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக மின் பகிர்மானக் கழகத் திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளர் அறிக்கை.
10. எழுத்தாளர் இமயத்திற்கு புதிய பொறுப்பு
தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமையம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
