ARTICLE AD BOX

'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் நடிகர் நானி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‛டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அதன் பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்கவிருந்தார் என கூறப்பட்டது.
ஆனால் இப்படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளதாக கூறப்படுக்கிறது. நானி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த படத்தை இயக்கிய பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணையலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நானி தற்போது நடித்து வரும் ஹிட் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக இதன் படப்பிடிப்பு துவங்கும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.