50 செகண்டுக்கு இத்தனை கோடியா? முன்னனி நடிகர்களை வாய்பிளக்க வைத்த நயன்தாரா

4 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வந்த இவர் வெள்ளி திரையில் நுழைந்து இன்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் இடம் பிடித்திருக்கிறார். ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார் நயன்தாரா. அதன் பிறகு கிளாமரான உடை அணிந்து நடித்து வந்தாலும் பில்லா திரைப்படம் தான் அவருடைய மார்கெட்டையே உயர்த்தி காட்டிய திரைப்படமாக அமைந்தது. பிகினி உடையில் பில்லா படத்தில் நடித்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தார். ஐயா படத்தில் நடித்த நயன்தாராவா இது என அனைவரும் வாயடைத்து போய் நின்றனர்

அந்த படத்திற்கு பிறகு தான் ஸ்டைலிஷ் ஆன லுக்கில் களமிறங்கினார் நயன்தாரா. ஆரம்பத்தில் அவருடைய மேக்கப் ட்ரெஸ்ஸிங் என அனைத்தையும் விமர்சனம் செய்தவர்கள் அடுத்தடுத்து அவர் ஸ்டைலிஷ் ஆக மாறியதும் அவரை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆகவே பெண்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று ஒரு பிசினஸ் வுமனாகவும் முன்னணி நடிகையாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் குடும்பத்தை கவனிக்கும் ஒரு பெண்ணாகவும் என பன்முகம் கொண்ட ஒரு பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என எல்லா மொழிகளிலும் இவர்தான் இன்று நம்பர் ஒன் நடிகை. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் இவரைப் பற்றிய ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதாக தெரிகிறது.

அதுவும் அந்த விளம்பர படத்தில் வெறும் ஐம்பது வினாடிக்கு மட்டும்தான் அதில் நடிக்கிறாராம். அதற்கு ஐந்து கோடி வரை சம்பளம் கேட்டதாக தகவல் கிடைத்துள்ளது .இது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி அஜித் விஜய் இவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் இவருடைய இந்த சம்பளம் பார்க்கப்படுகிறது. 50 வினாடிக்கு ஐந்து கோடியா என ரசிகர்களும் தங்களுடைய கமெண்டில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Read Entire Article