ARTICLE AD BOX
டாடா கேபிடல் ஐபிஓ.. ரூ.91,000 கோடி மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகம்.!!
இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான டாடா குழுமம், தனது நிதிச் சேவை பிரிவான டாடா கேபிடல் நிறுவனத்திற்காக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) கொண்டு வர இருக்கிறது. இந்த IPO மூலம் $2 பில்லியன் (சுமார் ரூபாய் 16,500 கோடி) வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் மொத்த மதிப்பு $11 பில்லியன் (சுமார் ரூபாய் 91,000 கோடி) ஆக உயர வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் (Stock Market) மிகப்பெரிய வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த IPO, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாடா கேபிடல், வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC) செயல்பட்டு வருகிறது. இது, வீட்டு கடன், வாகனக் கடன், தொழில் கடன், தனிநபர் கடன், முதலிய பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது. 900+ கிளைகள் கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. மும்பையை தளமாகக் கொண்ட டாடா கேபிடல், நடுநிலை மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் (MSME), பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்குவதில் முக்கிய வேடிக்கையாளராக இருக்கிறது.
டாடா கேபிடல் ஐபிஓ பற்றிய முக்கிய தகவல்களைப் பார்க்கும்போது, நிறுவனம் மொத்தம் $11 பில்லியன் மதிப்பீட்டைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த IPO மூலம் $2 பில்லியன் வரை நிதி திரட்டப்படலாம். இதில் 230 மில்லியன் பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும், ரூபாய் 1,504 கோடி மதிப்புள்ள உரிமை வெளியீடும் (Rights Issue) அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்படி, 2025 செப்டம்பர் மாதத்திற்குள் டாடா கேபிடல் பங்குச் சந்தையில் பட்டியலிடல் கட்டாயமாகும். இந்த IPO திட்டத்திற்காக, ஜே.பி. மோர்கன் (JP Morgan), கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) உள்ளிட்ட முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஆலோசகர்களாக செயல்படுகின்றன.
மேலும், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (TICL) இந்த நிறுவனத்தில் 2% பங்குகளை கொண்டுள்ளது. இந்த பெரிய அளவிலான IPO, இந்திய பங்குச் சந்தை மற்றும் நிதி சேவைகள் துறையில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
டாடா கேபிடல் IPO இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா $3.3 பில்லியன் ஐபிஓ மூலம் வரலாற்றில் சாதனை படைத்தது. LG Electronics India, $1.5 பில்லியன் IPO தொடங்கவுள்ளது. புருடென்ஷியல் (Prudential Plc) நிறுவனம் $1 பில்லியன் IPO திட்டமிட்டுள்ளது. இதனால், இந்திய பங்குச் சந்தை 2025-இல் பெரிய முதலீடுகளை ஈர்க்கும் சந்தையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த IPO மூலம் டாடா கேபிடல் வளர்ச்சி சிகரத்தை அடைய உள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய கிளைகள் திறக்கும். ஆன்லைன் கடன் வழங்கல், ஃபின்டெக் சேவைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும். சிறந்த வருவாய் வழங்கும் பங்கு மாடல் உருவாக்கும்.
இந்த IPO வெளிவந்தவுடன், அதில் முதலீடு செய்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எனவே, பங்குச் சந்தையில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த IPO பற்றிய தகவல்களை தொடர்ந்து கவனிக்கலாம்