ARTICLE AD BOX
மூணாறு: கேரளா மாநிலம் மூணாறில் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தபடி ரசிக்கும் வகையில் கண்ணாடி இழையால் வடிவமைக்கப்பட்ட, ராயல் வியூ என்ற பெயரில் டபுள் டெக்கர் பஸ் பிப்.2ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பஸ் சேவை தொடங்கியது முதலே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்நிலையில் நேற்று டபுள் டெக்கர் பேருந்தின் பயணத்தின் போது சுற்றுலா பயணியான இளைஞர் ஒருவர் பகுதி உடலை வெளியே தெரியும்படி ஜன்னலை பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாகச பயணம் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பேருந்தில் பயணியின் இத்தகைய செயலுக்கு போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post டபுள் டெக்கர் பஸ்சில் சாகச பயணம் appeared first on Dinakaran.