ARTICLE AD BOX
ஜோத்பூர்: ராஜஸ்தான்,ஜோத்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவியை சீனியர் மாணவிகள் 3 பேர் ராகிங் செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரிப்பதற்கு எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான 2 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒரு மாணவி 3 மாதங்களுக்கும், இன்னொருவர் 1 மாதத்திற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர்கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் என்று ஜோத்பூர் எய்ம்ஸ் கல்லூரி செய்தி தொடர்பாளர் ஜீவன்ராம் பிஷ்ணோய் தெரிவித்தார்.
The post ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 2 நர்சிங் மாணவிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.