ஜெர்மனி தேர்தல்: ஆளுங்கட்சி படுதோல்வி..!

3 hours ago
ARTICLE AD BOX

பெர்லின் : ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) நடைபெற்று முடிந்துள்ள தேர்தலுக்கு பிந்தைய முடிவுகளின்படி, ஜெர்மனியின் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தோல்வியடைந்திருப்பதாக முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆளுங்கட்சியான ‘சோசியல் டெமாக்கிரட்ஸ்(ஜனநாயக சமூகம் கட்சி)’ கட்சியால் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது.

ஜெர்மனியில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னொருபுறம், ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்திருப்பது ஜெர்மன் வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் குறிப்பிடத்தக்க நகர்வாக பார்க்கப்படுகிறது.

Read Entire Article