ஜெய் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

6 hours ago
ARTICLE AD BOX

ஜெய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.ஜெய் நடிக்கும் புதிய படம்.... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற திரைப்படத்தில் விஜயின் தம்பியாக துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். ஜெய் நடிக்கும் புதிய படம்.... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!அதைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, கலகலப்பு 2 என பல வெற்றி படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் பேபி & பேபி எனும் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தினை பிவி ஃப்ரேம்ஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பாபு விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஜெய் நடிக்கும் புதிய படம்.... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!இந்த படத்தில் ஜெய் உடன் இணைந்து மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு, ஆதித்யா கதிர், கே ஜி எஃப் புகழ் கருடா ராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஜெய் நடிக்கும் புதிய படம்.... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 3) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Entire Article