ஜெயில் கைதியாக நடிக்கும் அஜித்…. ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட்!

2 days ago
ARTICLE AD BOX

குட் பேட் அக்லி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ஜெயில் கைதியாக நடிக்கும் அஜித்.... 'குட் பேட் அக்லி' பட அப்டேட்!

அஜித் நடிப்பில் கடந்தவர் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது வருகின்ற ஏப்ரல் 10 அன்று குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நடிகை சிம்ரன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடிகை திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயில் கைதியாக நடிக்கும் அஜித்.... 'குட் பேட் அக்லி' பட அப்டேட்!அதாவது ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே நடிகர் அஜித் இந்த படத்தில் மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. அதன்படி அந்த மூன்று கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரம் ரெளடி கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. எனவே அந்த ரௌடி கதாபாத்திரம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது. ஆகையினால் அஜித், ஜெயில் கைதி கெட்டப்பில் நடித்திருக்கிறார் எனவும் ஜெயிலில் நடப்பது போன்று பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் கசிந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Entire Article