ARTICLE AD BOX

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவிப்பு விடியோவாக வெளியிட்டது. அதில், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், மற்றும் ரஜினியின் ஆக்க்ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் - 2 படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளதாகவும், இதற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.