ARTICLE AD BOX
சென்னை: லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா நடித்துள்ள படம், ‘ஜென்டில்வுமன்’. ஜோசுவா சேதுராமன் எழுதி இயக்கியுள்ளார். இவர், ‘கொரில்லா’ என்ற படத்தின் இயக்குனர் டான் சான்டியின் உதவியாளர். கோமளா ஹரி பிக்சர்ஸ் அன்ட் ஒன் ட்ராப் ஓஸன் பிக்சர்ஸ் சார்பில் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என்.நரேந்திர குமார், லியோ லோகன் நேதாஜி இணைந்து தயாரித்துள்ளனர். சா.காத்தவராயன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். யுகபாரதி வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார்.
படம் குறித்து ஜோசுவா சேதுராமன் கூறுகையில், பெண்களுக்கான விடுதலை என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமானது என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். இன்சூரன்ஸ் கம்பெனி ஏஜெண்ட் வேடத்தில் ஹரி கிருஷ்ணன், அவரது மனைவியாக வலிமையான கேரக்டரில் லிஜோமோல் ஜோஸ், ஓவியராக லாஸ்லியா நடித்துள்ளனர். இதில் படத்தின் தொடக்கத்தில் லாஸ்லியா வரைய ஆரம்பிக்கும் ஒரு ஓவியம், வரைந்து முடித்ததும் கிளைமாக்ஸ் இடம்பெறுகிறது. அந்த ஓவியத்துக்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சில வசனங்களை ‘மியூட்’ செய்துள்ளனர். ‘கட்’ எதுவும் கிடையாது’ என்றார்.