ARTICLE AD BOX

சென்னை,
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணனுடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார்.
'ஜென்டில்வுமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் "ஆண்களுக்கு மட்டும்தான் ஜென்டில் என்று சொல்ல வேண்டுமா? வலிமை, பொலிவினை புது அர்த்தம் தெரிவிக்க ஜெண்டில்வுமன் வந்திருக்கிறாள்" என படக்குழு குறிப்பிட்டிருந்தது.
'ஜென்டில்வுமன்' படம் மார்ச் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. 'ஜென்டில்வுமன்' திரைப்படத்தின் 'சுளுந்தீ' பாடலை யுகபாரதி வரிகளில் ரேஷ்மி சதீஷ் பாடியுள்ளார்.
"ஜென்டில்வுமன்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
திருமணம் ஆன ஹரி கிருஷ்ணன் லாஸ்லியாவுடன் தொடர்பு வைத்துள்ளார். லிஜோமோல் , லாஸ்லியா மற்றும் ஹரி கிருஷ்ணன் இந்த மூவருக்கும் இடையே உள்ள தொடர்பை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
இந்நிலையில் 'ஜென்டில்வுமன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.