ARTICLE AD BOX
SA Chandrasekhar About Jason Sanjay : இயக்குநரும், நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் வேளைகளில் பரபரப்பாக இறங்க இருக்கிறார். இந்த நிலையில், அவர் தனது தாத்தா எஸ்.ஏ.சந்திர சேகரிடம் தந்தையை வைத்து தனது முதல் படத்தை இயக்க மாட்டேன் என கூறியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜேசனின் முதல் படம்:
ஜேசன் சஞ்சையை விஜய்யுடன் சில படங்களில் குட்டி பையனாக பார்த்திருப்போம். இப்போது 24 வயது வாலிபராக வளர்நது விட்ட அவர், வெளிநாட்டில் திரைப்படக்கலை பயின்ற பிறகு இப்பாேது தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், ஜேசனும் விஜய்யை போலவே தன்னை பற்றிய விஷயங்களை மிகவும் பிரைவேட்டாக வைத்துக்காெள்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
பேரன் குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்:
இயக்குநரும் நடிகருமான எஸ.ஏ.சந்திரசேகர் கூரன் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, அவர் தனது பேரன் ஜேசன் குறித்தும் பேசியிருக்கிறார். ஒரு முறை வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது “படித்து முடித்து விட்டு என்ன செய்யப்போகிறாய் ஜேசன்?” என கேட்டிருக்கிறார் SAC. நடிகரின் மகனுக்கு நடிகராகத்தானே ஆசை இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இந்த கேள்வியை கேட்டிருக்கிறார். ஆனால் ஜேசன், “நான் இயக்குநர் ஆகப்போகிறேன் தாத்தா” என சற்று வித்தியாசமான பதிலை கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டவுடன் SAC, “சரி, வீட்டிலேயே பெரிய ஹீரோ இருக்காரு. அவரை வைத்து படம் பண்ணிறலாம்” என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜேசன், “நான் எனது முதல் படத்தை அப்பாவை வைத்து இயக்க மாட்டேன். என் முதல் பட ஹீரோ விஜய் சேதுபதிதான்” என்று கூறியிருக்கிறார். இதை கேட்டவுடன் SAC-யே ஷாக் ஆகிவிட்டாராம்.
மேலும் படிக்க | அஜித்தின் மேனேஜருடன் விஜய் மகன் சஞ்சய்! தோள் மேல் கைப்போட்டு எடுத்த போட்டோ வைரல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ