ARTICLE AD BOX
ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு காரணம் ஒரு நடிகை தான் என வைரலாகிய பதிவிற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி தம்பதிகள்
நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பிரபலமானவர் தான் ஜிவி பிரகாஷ்.
இவர், கடந்த வருடம் அவருடைய காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளார்.
இதற்கான காரணத்தை இருவரும் கூறவில்லை. பிரிந்தாலும் வேலை என வரும் பொழுது இருவரும் சேர்ந்து தான் இருக்கிறார்கள்.
இருந்த போதிலும் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்து கொள்ள நடிகை திவ்யா பாரதி தான் காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர். இந்த வதந்திக்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, “ பொதுவாக பிரபலங்கள் எனும் வரும் பொழுது வதந்திகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் கடந்த வருடம் தங்களின் விவாகரத்தை அறிவித்த ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்து, “
இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து கொள்கிறோம், ஆனால் நாங்கள் நண்பர்களாக எங்கள் வாழ்க்கையில் தொடர்வோம்..” எனக் குறிப்பிட்டு அறிக்கையொன்றை பகிர்ந்தனர்.
மீண்டும் படத்தில் இணைய என்ன காரணம்?
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்- திவ்யபாரதி நடிப்பில் வெளியாகிய “கிங்ஸ்டன்” திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இதன்போது பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ், “ நான் பேச்சுலர் திரைப்படத்தில் நடிக்கும் போது திவ்ய பாரதியோடு சேர்ந்து நடித்து தான் என்னுடைய மனைவியை பிரிய காரணம் என பலரும் பேசி வந்தார்கள். ஆனால் அது உண்மையில்லை.
பேச்சுலர் படத்திற்கு பின்னர் அவரை கிங்ஸ்டன் படத்தில் தான் பார்த்தேன். வெளியில் நாங்கள் பார்த்து கொண்டது கூட கிடையாது. இவ்வளவு தான் எங்களுக்கான உறவு.
திவ்யபாரதி கொடுத்த பதில்
இதனை தொடர்ந்து திவ்யபாரதி பதில் பேசுகையில், “ஜிவி பிரகாஷ் சாரோடு சேர்ந்து நடிப்பதால் தவறாக பேசினார்கள். எனக்கு பிறை தேடும் பாடல் மிகவும் பிடிக்கும் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் அழகான தம்பதிகள் அவர்களுக்குள் நான் வரவில்லை.
என்னை குறிப்பிட்டு பேசாதீர்கள். இருந்தாலும் சில பெண்கள் சமூக வலைத்தளங்களில், “ஏன் இப்படி பண்றீங்க? அவங்க செம்ம ஜோடி தெரியுமா? ஏன் நீங்க போய் இப்படி கெடுத்தீங்க..” என கருத்துக்களை பகிர்வார்கள். நான் பார்த்து விட்டு எதுவும் பதில் கொடுக்கமாட்டேன்..” என பேசியிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |