ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

3 days ago
ARTICLE AD BOX

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.

அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். பல்வேறு நபர்களும், தங்களது ஜிமெயில் கணக்குகளை செல்போனில்தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர், போன் வாங்கியதுமே, அதனை ஆன் செய்யும்போது கேட்கும் மெயிலில் இந்த ஜிமெயில் கணக்கைப் பதிவுசெய்துதான் திறந்திருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல், மெயில் ஐடி என்று யார், எங்கு கேட்டாலும் அதனை கொடுத்துவிடுவோம். ஆனால், அவ்வப்போது அதனை சோதித்து தேவையில்லாததை டெலிட் செய்வது போன்றவற்றை செய்திருக்க மாட்டோம். ஆனால், அதெல்லாம் இப்போது சிக்கலில்லை.

வேறென்ன சிக்கல் என்றால், நாம் செல்போனில் பயன்படுத்திய செயலிகள், ஜிமெயில் கணக்கு மூலம் உள் நுழைந்த இணையதளங்கள் என பலவற்றை நாம் மறந்தே போயிருப்போம். சில செயலிகளை தேவையில்லை என டெலீட் கூட செய்திருப்போம்.

ஆனால், அந்த செயலிகளும் இணையதளங்களும் நமது ஜிமெயிலுடன் தொடர்பில்தான் இருக்கும். அவர்களது தொடர்பை நாம் முற்றிலும் துண்டிக்க வேண்டும்.

அதற்கு..

ஜிமெயில் கணக்குக்குச் சென்று, ப்ரொஃபைல் என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் என்பதை கிளிச் செய்ய வேண்டும்.

அதில் செக்யூரிட்டி என்று இருக்கும். அதைக் கிளிக் செய்யவும்.

அதில் யுவர் கனெக்ஷன் டு தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் என்பதை த் தேர்வு செய்ய வேண்டும்.

அதில், மொத்த ஹிஸ்ரியும் பட்டியலிடப்படும்.

அதில் உங்களுக்குத் தேவையில்லாதவற்றை டெலிட் செய்து விடுங்கள்.

இதனால் என்ன ஆகும்? எதுவும் ஆகாது. உங்களது ஜிமெயில் ஐடி பாதுகாப்பாக இருக்கும். தேவையற்றவர்கள் கையில் ஜிமெயில் சிக்காது. தேவையற்ற குப்பைகள் சேராது. சைபர் குற்றவாளிகளிடமிருந்தும் பாதுகாக்கப்படலாம்.

எனவே, ஜிமெயில் வைத்திருப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை இதனை செய்துவிடுவது சாலச் சிறந்தது.

Read Entire Article