ஜிபிஎஸ் நோய்: மேலும் 2 நோயாளிகள் உயிரிழப்பு..!

4 days ago
ARTICLE AD BOX

புணே : கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் இருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக இன்று(பிப். 19) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புணேவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரமற்ற நீா், உணவில் ஜிபிஎஸ் நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்திலும், அதனைத்தொடர்ந்து மேற்கு வங்கம், ஆந்திரம் உள்பட பிற மாநிலங்களிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவியது.

ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திருவள்ளூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன் சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.

Read Entire Article