ஜாப் செக்யூரிட்டி என்ற பேச்சே இல்லை.. கருணையே இல்லாமல் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..!

4 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

ஜாப் செக்யூரிட்டி என்ற பேச்சே இல்லை.. கருணையே இல்லாமல் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..!

News

பல்வேறு முன்னணி டெக் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பொதுவாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் நம்முடைய வேலைக்கு பாதுகாப்பு இருக்கிறது என சொல்லப்படுவதுண்டு. ஆனால் இனி அப்படி ஒன்றை நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என ஐடி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார ஸ்திரமற்ற தன்மை , ஆட்டோமேஷன் உள்ளிட்டவை காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தீவிரமாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றன. இதனால் மைக்ரோசாப்ட், அமேசான், மெடா உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் தினம்தோறும் அச்சத்துடனே வேலைக்கு சென்று வருவதாக ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி இருக்கிறது.

ஜாப் செக்யூரிட்டி என்ற பேச்சே இல்லை.. கருணையே இல்லாமல் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..!

அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவில் பெரு நிறுவனங்களில் வேலை கிடைத்தால் நமக்கு பணி பாதுகாப்பு உறுதி என்பதெல்லாம் கடந்த காலம் ,இந்த காலத்தில் பணி பாதுகாப்பு என்ற வார்த்தையை நாம் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய வேலைகளை மாற்றியமைத்து வருகிறது பல்வேறு பதவிகளுக்கு இனி மனிதர்களே தேவையில்லை என்ற நிலை உருவாகிவிட்டது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது மிடில் லெவல் வேலையில் இருக்கும் ஊழியர்கள் தான் என அந்த பதிவாளர் கூறியுள்ளார்.

குறிப்பாக 30களின் இறுதிகளிலும் 40களின் தொடக்கத்திலும் இருக்கும் நபர்கள் , இவர்களால் புதிதாக நுழைவு நிலை வேலைகளுக்கு செல்ல முடியாது, அதேவேளையில் பெரிய உயர் பதவிகளுக்கும் செல்ல முடியாது. நிறுவனங்கள் முதலில் இவர்களை தான் பணிநீக்கம் செய்கின்றன என கூறுகிறார். இவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் நபர்களால் புதிதாக வேலை தேடி பெறுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு நிறுவனங்களும் குறிப்பிட்ட சில பதவிகளையே நீக்கி வருவதாக அவருடைய இந்த பதிவு தெரிவிக்கிறது. அமேசான் நிறுவனம் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது மிக தீவிரமாக தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. இதற்கு முன்பு ஊழியர்களின் செயல் திறன் அடிப்படையில் ஆண்டுதோறும் 8 சதவீதம் வரை ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் தற்போது அதனை இரண்டு இலக்கமாக அதிகரித்து விட்டன.

எந்த ஒரு கருணையும் இல்லாமல் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர் என பல்வேறு ஐடி ஊழியர்களும் புலம்புகின்றனர். சிலிக்கான் வேலி, லண்டன் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் எல்லாம் பணிநீக்கம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்திய வேலைவாய்ப்பு சந்தையை பொறுத்தவரை தற்போதைக்கு மிகப்பெரிய அளவில் பணிநீக்க பிரச்சனை ஏற்படவில்லை இருந்தாலும் கூடிய விரைவில் இந்தியாவிலும் இதனை எதிர்பார்க்கலாம் என அந்த நபரின் பதிவு தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் தொழில் நிபுணர்கள் வேலை வாய்ப்பு பெறுவது மிகவும் சவாலானதாக இருக்கிறது என கூறப்படுகிறது. ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில் நல்ல பணி அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் கூட புதிதாக வேலை தேடுவதற்கு ஒன்றரை ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகின்றன எனக் கூறியுள்ளார்.

மூத்த நிலை நிபுணர்கள் கூட புதிதாக வேலைவாய்ப்பு பெறுவதற்கு தடுமாறுகின்றனர் என கூறியுள்ளார். நான்கு பேர் குழுவாக வேலை செய்த இடத்தில் ஒருவரை பணிநீக்கம் செய்துவிட்டு அந்த இடத்தில் செயற்கை நுண்ணறிவு திறனை கொண்டு வேலையை முடிக்கின்றனர் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் குறைந்த ஊதியத்தில் இந்தியா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நுழைவு நிலை ஐடி ஊழியர்களை பணியில் அமர்த்துகின்றன, இதுவும் ஒரு பிரச்சனை என ஒரு பயனர் கூறியுள்ளார்.

Read Entire Article