ARTICLE AD BOX
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நியாயமானது. ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் பிரச்னையில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. மீனவர்களின் போராட்டத்திற்கு மமக ஆதரவு தெரிவிப்பதோடு ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
The post ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு மீனவர் பிரச்னையை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு appeared first on Dinakaran.