ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் இளைஞர் பலி!

20 hours ago
ARTICLE AD BOX

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மகேஷ் பாண்டியன் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகேஸ் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில், மாடு முட்டி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article