ARTICLE AD BOX
ஜப்பானிய ஜிக்லி சீஸ்கேக், சாஃப்டாகவும் அதே சமயம் வித்தியாசமான சுவையுடனும் அனைவருக்கும் ஏற்ற விதமாகவும் இருக்கும். இதை கடையில் அதிக பணம் கொடுத்து வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம் . வாயில் வைத்ததுமே கரையும் இந்த சீஸ்கேக்கை செய்ய 7 எளிய முறைகளை பின்பற்றினாலே போதும். சரியாக முறை, சரியான அளவு, சரியான பதம் தெரிந்தாலே போதும் ஒரு பெர்ஃபெக்ட் கேக்கை நம்முடைய வீட்டில் குறைந்த செலவிலேயே செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
க்ரீம் சீஸ் - 150 கிராம்
வெண்ணெய் - 30 கிராம்
பால் - 100 மில்லி
கோதுமை மாவு - 40 கிராம்
கார்ன் ஸ்டார்ச் - 20 கிராம்
முட்டை - 3 (மஞ்சள், வெள்ளை பிரித்து வைத்துக் கொள்ளவும்)
சர்க்கரை - 80 கிராம்
வென்னிலா எஸென்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை
தவறிக் கூட வாழைப்பழத்துடன் இந்த 5 உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்
செய்முறை:
- க்ரீம் சீஸ் கலவை தயார் செய்வதற்கு க்ரீம் சீஸை மென்மையாக கரைத்த பின்னர், அதில் வெண்ணெய், பால் சேர்த்து மிதமான சூட்டில் கலந்து கொள்ளுங்கள். அனைத்தும் நன்கு கலந்து க்ரீமியாக மாறியவுடன், நன்கு ஆற விடுங்கள்.
- மாவு கலப்பதற்கு குளிர்ந்த கலவையில் கோதுமை மாவு மற்றும் கார்ன் ஸ்டார்ச் சேர்த்து, மென்மையாக கலந்து கொள்ளவும். இதில் வென்னிலா எஸென்ஸ் மற்றும் முட்டை மஞ்சள் கருவை ஊற்றி சேர்க்கவும்.
- முட்டை வெள்ளை மெரிங்க் உருவாக்க வேண்டும். இதற்கு முட்டை வெள்ளை கருவை மிக்ஸியில் அடித்து, அதில் சர்க்கரையை மெதுவாகச் சேர்த்து மென்மையான மெரிங்க் உருவாக்கவும்.
- மெரிங்கை கொஞ்சள் கொஞ்சமாக சீஸ் கலவையில் சேர்த்து, மெதுவாக கலந்து, தோசை மாவு பதத்தில் வரும் வரை கலந்து விடவும்.
- பேக்கிங் மோல்டில் செய்வதற்கு நமக்கு தேவையான வடிவத்தில் இருக்கும் கேக் மோல்டில் பேக்கிங் பேப்பர் இட வேண்டும். அதில் தயார் செய்யப்பட்ட சீஸ் கலவையை மெதுவாக ஊற்றி, மேல் பகுதியைச் சமமாக்கவும்.
- பேக் செய்வதற்கு ஓவனை 150°C இல் முன்கூட்டியே சூடாக்கி, ஒரு பானில் சூடான நீரை ஊற்றி, அதன்மேல் சீஸ்கேக் மோல்டை வைத்து 60 நிமிடங்கள் பேக் செய்யுங்கள்.
- ஜிக்லி சீஸ்கேக் ரெடி. கேக் முழுமையாக வெந்ததும், ஓவனை அணைத்து கதவை சிறிது நேரம் திறந்தே விடுங்கள். பின் வெளியே எடுத்து, முழுமையாக ஆறிய பிறகு வெட்டி பரிமாறலாம்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கைகளில் ஒட்டிக் கொள்கிறதா? இதோ சூப்பர் வழி இருக்கே
சிறப்பு குறிப்புகள்:
- மெரிங்கை அதிகமாக அடிக்க வேண்டாம், இல்லை என்றால் கேக் வெடித்துவிடும்.
- ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து செய்யும் முறையில் பேக் செய்தால், சீஸ்கேக் ப்ரிமியம் ரெஸ்டாரண்ட் தரத்தில் வரும்.
- இந்த கேக்கை பிளாஸ்டிக் ஷீட்டில் மடித்து ஃபிரிட்ஜில் 3 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
இந்த 7 எளிய வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் வீட்டிலேயே ருசியான ஜப்பானிய ஜிக்லி சீஸ்கேக் செய்யுங்கள்!