ARTICLE AD BOX
ஜனநாயகன் அப்டேட் வந்துக்கிட்டே இருக்கும்.. தரமான சம்பவம் இருக்கு.. விஜய் பட நடிகை தகவல்!
சென்னை: மலையாள நடிகை மமிதா பைஜு 2கே கிட்ஸ்களுக்கு பிடித்த ட்ரீம் ஹீரோயின் என்றே கூறலாம். பிரமேலு படத்திற்கு பிறகு அவர் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். நேற்று கோவையில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற மமிதா பைஜூ அடுத்த மாதம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என தெரிவித்திருக்கிறார். இதை கேட்டதும் அங்கு கூடியிருந்த அனைவரும் கத்தி கூச்சலிட்டு அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயகன் படம் குறித்து தான் மமிதா பைஜு கூறியிருப்பார் போல என கருத்து தெரிவித்துள்ளனர்.
மமிதா பைஜூ வணங்கான் படத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். பின்னர், இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகவும், அதனால், அப்படத்தில் இருந்து விலகியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு பாலா மிமிதா பைஜூ எனக்கு மகள் போன்று இருக்கிறாள். அவரை அடிக்கவில்லை, ஒரு சீனில் இப்படி இருக்க வேண்டும் என கை ஓங்கினேன் அதற்குள் அப்படி எழுதிவிட்டார்கள் என மறுப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மமிதா பைஜூவும் பாலா சார் என்ன அடிக்கவில்லை. அவர் சொல்லி கொடுத்த ஒரு நடனம் எனக்கு வரவில்லை அதனால் அதிலிருந்து விலகினேன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆட்டம் பாட்டம்: பிரமேலு படத்தின் வெற்றிக்கு பிறகு மமிதா பைஜூவுக்கு இளைஞர்கள் பட்டாளம் ரசிகர்களாக மாறியுள்ளனர். கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு மாணவர்களுடன் ஜாலியாக கலந்துரையாடுவது, அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போன்ற வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டானது. மமிதா பைஜூவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். பார்க்க துறுதுறுவென்று சுட்டித்தனங்களுடன் இருப்பதாலோ என்னவோ ரசிகர்களுக்கு அவர் எது செய்தாலும் பிடித்து விடுகிறது.
ஜனநாயகன்: விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் மமிதா பைஜூ அவருக்கு மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய்யுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க மமிதா பைஜூ தயங்கியதாகவும், அவரை என்னை அழைத்து போட்டோ எடுத்ததாகவும் மமிதா தெரிவித்தார். விஜயின் ரசிகையான இவருக்கு அவருடனே படத்தில் நடிககும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்து மகிழ்ச்சியடைந்தார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், கடந்தாண்டு பாலய்யா நடித்த பகவத் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என செய்திகளும் வெளியாகியுள்ளன. படத்தின் முதல் பார்வை அரசியல் குறியீடோடு வந்திருப்பதால் பகவத் கேசரி கொஞ்சம் மாற்றி எடுக்க வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. விஜய் அரசியலில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார்.

ரெண்டாவது வானம்: ராட்சசன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக ரெண்டாவது வானம் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக இப்படக்குழுவினர் கோவை சென்றனர். அப்போது மமிதா பைஜூவிடம் விஜய்யுடன் நடிக்கும் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டதாம்.
அதற்கு அவர் சிரித்து கொண்டே அடுத்த மாதத்தில் இருந்து ஜனநாயகன் அப்டேட் வந்துகொண்டே இருக்குமாம். ஜனநாயகன் படம் வேற லெவலில் இருக்கும். விஜய் சாரை வேற மாதிரி பாப்பீங்க என்று அள்ளி தெளித்திருக்கிறாராம். கண்டிப்பா நிறைய அப்டேட் இருக்கு எனவும் அவர் தெரிவித்தாராம்.