ஜன நாயகன் படத்தின் ரிலீஸ்..இந்த ஆண்டு இல்லை! வேறு எப்போது தெரியுமா?

8 hours ago
ARTICLE AD BOX

Vijay Jana Nayagan Movie Release :மிக விரைவில் தமிழ் திரையுலகிற்கு குட்-பை சொல்லிவிட்டு, அரசியலில் முழு நேரமாக இணைய இருப்பவர், விஜய். அவர், கடைசியாக நடித்திருக்கும் படம் ஜன நாயகன். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் டிஜிட்டல் உரிமை குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜன நாயகன் திரைப்படம்:

இந்த ஆண்டின் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களுள் ஒன்று, ஜன நாயகன். விஜய்யின் 69வது படமான இது, அவருக்கு கடைசி படமாகும். இப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த விவரம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த படத்தைை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இது, அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

ரிலீஸ் எப்போது?

ஜன நாயகன் திரைப்படம், இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த ரிலீஸ் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த புது ரிலீஸ் தேதி குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக விஜய் படம் என்றாலே, ஏதேனும் ஒரு பண்டிகையின் போது வெளியாவது வழக்கம். இதுவரை உங்களது படங்கள் அப்படிப்பட்ட பண்டிகை தினங்களில் தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த வகையில் ஜன நாயகன் திரைப்படமும் ஒரு பண்டிகை தினத்தில் வழியாக இருப்பதாக கூறப்படுகிறது. 2026 பொங்கல் பண்டிகை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

டிஜிட்டல் உரிமை:

எந்த படமும் திரையுரங்குகளில் வெளியாவதற்கு முன்னர், டிஜிட்டல் உரிமையை ஏதேனும் ஒரு நிறுவனம் வாங்கிக்கொள்வதுண்டு. இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் உரிமையும் ஒரு நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனம் வேறு எதுவும் இல்லை, நெட்ஃப்ளிக்ஸ்தான். பல கோடிகள் கொடுத்து, இந்நிறுவனம் இந்த உரிமையை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பல நிறுவனங்கள், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க போட்டி போட்டதாகவும் கடைசியில் நெட்ஃப்ளிக்ஸிற்கு இதன் உரிமை கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பல கோடிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. சென்னையில் இதற்கென்று பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்து வருகிறது. சில நாட்கள், கிண்டியில் இந்த படப்பிடிப்பு நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.

நடிப்பவர்கள் யார் யார்?

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே நடடித்து வருகிறார். இது, விஜய்யுடன் அவர் இணையும் 2வது படமாகும். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து பாபி டியோல், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் தற்போது வேகமாக நடைப்பெற்று வருகிறது.

மேலும் படிக்க | ‘ஜன நாயகன்’ என்றால் என்ன? இப்படி யாரை அழைக்க வேண்டும்? தளபதி 69 டைட்டிலின் அர்த்தம்..

மேலும் படிக்க | ‘ஜன நாயகன்’ படத்தில் இணைந்த 39 வயது நடிகை!! விஜய்யுடன் ஏற்கனவே நடித்தவர்-யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article