ARTICLE AD BOX
IPL 2025: ஷாருக்கானோடு ஆட்டம் போட்ட ரிங்கு சிங் - விராட் கோலி.. சிரிப்பை அடக்க முடியல!
கொல்கத்தா: 18 வது ஐபிஎல் சீசன் இன்று அதாவது மார்ச் 22 ஆம் தேதியில் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசன் கலை நிகழ்ச்சிகளுடனும் வாணவேடிக்கைகளுடனும் பிரமாண்டமாக தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளை ஷாரூக் கான் தொகுத்து வழங்கினார். அவருடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும் எந்த அளவிற்கு அபிமானிகளும் ரசிகர்களும் உள்ளார்களோ அதைவிட அதிக அளவிற்கு கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் உள்ளார்கள். இந்தியாவில் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது எனக் கூறும் அளவிற்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் குவிந்து கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் போல உள்ளது என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ளது.
A Special @KKRiders reunion 🤗
Shah Rukh Khan 💜 Rinku Singh
A special performance to delight the #TATAIPL 2025 opening ceremony 😍#KKRvRCB | @rinkusingh235 | @iamsrk pic.twitter.com/IK0H8BdybK
அப்படியான கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும் நிகழ்வாக ஐபிஎல் போட்டிகள் உள்ளது. இந்தியாவில் பல வகையான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், ரசிகர்களுக்கு ஐபிஎல் மீது தனி ஈர்ப்பு உள்ளது. இதற்கு ஒரு காரணமாக, வெளிநாட்டு வீரர்களைக் கூறலாம். இப்படியான நிலையில், இந்த ஆண்டு 18வது ஐபிஎல் சீசன் இன்று முதல் தொடங்கியது. இந்த சீசனின் தொடக்க விழாவை நடிகரும் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தொகுத்து வழங்கினார்.

விராட் - ரிங்கு: அப்போது அவர், மேடைக்கு கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான விராட் கோலியை அழைத்து சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரிங்கு சிங்கிடம் பேசும்போது, ரிங்கு சிங்கிடம் தன்னுடன் நடனம் ஆடும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அருகில் இருந்த விராட் கோலி இருவரிடம் இருந்து மைக்கை வாங்கி வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
நடனம்: உடனே பாடல் போடப்பட்டது. ரிங்கு சிங் மற்றும் ஷாரூக் கான் இணைந்து நடனமாடினார்கள். அவர்கள் நடனமாடியது பார்ப்பதற்கு சிரிப்பூட்டும் வகையில் இருந்ததால், விராட் கோலி உள்ளிட்ட பலரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் நடனமாடியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், இந்த வீடியோவை பலரும் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். ஷாருக் கான் விராட் கோலியுடனும் இணைந்து நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஷாருக்கான்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. மேலும் இந்த கோப்பையை வெல்வதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கம்பீர் சொல்லப்பட்டார். கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஏற்கனவே இரண்டு முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்து அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துவிட்டார் என ஷாருக்கான் தெரிவித்தார்.