ச்சீ.. பத்து பேரோடு அப்படி இருக்கணுமா..? அதுவும் இந்த பெரிய மனிதர்கள்.. சனம் ஷெட்டி கேட்ட கேள்வி

3 days ago
ARTICLE AD BOX

ச்சீ.. பத்து பேரோடு அப்படி இருக்கணுமா..? அதுவும் இந்த பெரிய மனிதர்கள்.. சனம் ஷெட்டி கேட்ட கேள்வி

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சனம் ஷெட்டி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் பேட் கேர்ள் திரைப்படம் குறித்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பற்றி வருகிறது.

ஒரு சிலருக்கு என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அதற்கு சரியான வாய்ப்பு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. அதுபோல சினிமா துறையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று காத்திருக்கும் பலருக்கு அதற்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சனம் ஷெட்டி.

Sanam Shetty Vijay TV Bad Girl

சனம் ஷெட்டி அம்புலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதைத் தொடர்ந்து இவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் அமையவில்லை. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த சனம் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனால் அதிகமான ரசிகர்கள் இது அன் ஃபேர் எவிக்ஷன் என்று கூறி வந்தனர். அதற்குப் பிறகு சனம் ஷெட்டி ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறார். சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களுக்கு தன்னுடைய சப்போர்ட் செய்து வருகிறார். அதுபோல அவர்கள் வெளியே வந்ததும் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் கூறுகிறார்.

புது சீரியலில் கதாநாயகியான பாக்கியலட்சுமி நடிகை.. அவரே வெளியிட்ட திடீர் பதிவு.. குவியும் வாழ்த்து
புது சீரியலில் கதாநாயகியான பாக்கியலட்சுமி நடிகை.. அவரே வெளியிட்ட திடீர் பதிவு.. குவியும் வாழ்த்து

அதுபோல சில போட்டியாளர்களை திட்டி தீர்த்தும் வருகிறார். கடந்த எட்டாவது சீசனில் கூட ராணவ், முத்துக்குமரன் போன்றவருக்கு சனம் அதிகமாக சப்போர்ட் செய்திருந்தார். ஆனால் சௌந்தர்யாவை ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்தார். இது போல தான் தற்போது பேட் கேர்ள் படம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

அதில், சம உரிமை என்பது பத்து பேருடன் படுப்பேன், தம்மடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதல்ல. ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதுதான். உண்மையான சம உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த சமூகத்தில் சமமாக வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா என்றால் அது இல்லை.

சினிமாவை பொருத்தவரை ஹீரோவுக்கு கொடுக்கப்படும் சம்பளமும், ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் ஒருபோல இல்லை. அதை போல் எப்போதும் ஒரு ஹீரோவை அணுகும் விதமும் ஒரு ஹீரோயினை அணுகும் விதமும் வெவ்வேறாக இருக்கிறது. என் வாழ்க்கையில் எனக்கு நேர்ந்ததை வைத்து தான் இதை சொல்கிறேன்.

கமலுக்காக தான் அந்த முடிவு எடுத்தேன்.. எங்கள் பிரிவு விதி அல்ல..! ட்ரெண்டாகும் ஸ்ரீவித்யாவின் பேட்டி
கமலுக்காக தான் அந்த முடிவு எடுத்தேன்.. எங்கள் பிரிவு விதி அல்ல..! ட்ரெண்டாகும் ஸ்ரீவித்யாவின் பேட்டி

எங்களை படங்களில் நடிக்க அழைக்கிறார்கள் என்று பார்த்தால் படுக்கவும் அழைக்கிறார்கள், இதுதான் நிலைமையாக இருக்கிறது. எனவே சம உரிமை வேண்டி இதைப் பற்றிய பேசுங்கள். ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து 10 பேருடன் படு, கஞ்சா அடி, தம்அடி என்று சொல்வது சம உரிமை அல்ல என்று கூறி இருக்கிறார்.

குறிப்பாக இப்படி ஒரு மோசமான படத்தை பெரிய மனிதர்கள் பாராட்டுவதும் தாங்க முடியாத வருத்தமாக இருக்கிறது என்று சனம் ஷெட்டி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் துணை இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் பற்றி பலரும் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சனம் ஷெட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
English summary
Actress Sanam Shetty has posted a video on her YouTube channel. In it, he expresses his dissatisfaction with the film. It comes about more comments on the Internet.
Read Entire Article