ARTICLE AD BOX

பிரம்மாண்டத்தை நம்பி மோசம்: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேரை எடுத்தவர் ஷங்கர். ஜெண்டில்மேனில் தொடங்கி இப்போது கேம் சேஞ்சர் படம் வரைக்கும் அவருடைய படங்கள் எல்லாமே பிரம்மாண்டம்தான். ஆனால் ஆரம்பகாலங்களில் அவருடைய படங்களை மக்கள் ரசித்ததற்கு முக்கிய காரணம் இப்போது மாதிரி செல்பேசி அப்போது இல்லை. அதனால் ஷங்கர் தாஜ்மஹால், ஈபிள் டவர் என உலக அதியசங்களை படங்களில் காட்டும் போது நமக்கு பிரமிப்பாக இருந்தது.
ஒரே டெம்ப்ளேட்: ஆனால் இப்போது செல்பேசி என்ற சின்ன வளையத்திற்கு உலகமே அடங்கி கிடக்கிறது. எல்லாவற்றையும் வீடியோக்கள் மூலமாகவும் விஷுவலாகவும் நாம் பார்த்து விடுகிறோம். ஏன் குறைவான பேக்கேஜில் பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வசதி கூட வந்து விட்டது. இதன் மூலம் நேரிடையாகவே நாம் போய் பார்க்கும் படி சூழல் வந்துவிட்டது. இப்படி இருக்கும் சூழலில் இன்னும் ஒரே டெம்ப்ளேட்டில் தான் ஷங்கர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கதை திருட்டு: அதனால்தான் சமீபகாலமாக அவருடைய படங்கள் சறுக்கலை தொடர்ந்து சந்தித்து கொண்டு வருகிறது. அதுவும் கதை திருட்டில் ஈடுபட்டதாக ஷங்கர் மீது ஆருர் தமிழ் நாடன் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்போதுதான் அந்த வழக்கில் சூடும் பிடித்திருக்கிறது. ஆருர் தமிழ் நாடன் எழுதிய ஒரு நாவலை வைத்துதான் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்திருப்பதாகவும் அது ஆருர் தமிழ் நாடனுக்கு தெரிய வந்த பிறகுதான் அவர் நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
16 ஒற்றுமைகள்: அந்த நாவலுக்கும் எந்திரன் படத்திற்கும் கிட்டத்தட்ட 16 ஒற்றுமைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷங்கர் 10 கோடி வரை மோசடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது எந்திரன் படத்திற்கு இந்த 10 கோடியை சம்பளமாகவோ அல்லது 10 கோடிக்கு விற்றிருக்கிறாரோ? எப்படி இருந்தாலும் 10 கோடி வரை இவர் மோசடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிலும் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் 15 கோடி வரை செலவு செய்திருக்கிறார் ஷங்கர். கடைசியில் அந்த பாடலே அந்தப் படத்தில் இடம்பெறவில்லை. ஷங்கரை பொறுத்தவரைக்கும் பணம் உள்ள தயாரிப்பாளர் மாட்டிவிட்டால் அவருக்கு ஒரே கொண்டாட்டம்தான். அந்த தயாரிப்பில் எவ்வளவு ஆட்டம் போட வேண்டுமோ புகுந்து விளையாடி விடுவார்.
இதுவே அவரது சொந்த தயாரிப்பு என்றால் கொஞ்சம் சிக்கனம் காட்டக் கூடியவர். உதாரணமாக வெயில், காதல், இரண்டாம் புலிகேசி, முதல்வன் போன்ற படங்களை சொல்லலாம். இதெல்லாம் அவருக்கு வெற்றியையும் கொடுத்த படங்களாகும். இவ்வாறு ஷங்கரை பற்றி பிரபல ஆஸ்கர் மூவிஸ் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.