ARTICLE AD BOX
செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் போக்குவரத்து சரகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றுவது போன்ற சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதம் மட்டும் சேலம், தர்மபுரியில், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அனுமதி, தகுதிசான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விதி மீறல் காரணமாக நிகழும் சாலை விபத்துகளை தடுக்க இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசாரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.