சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

1 day ago
ARTICLE AD BOX

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் மார்ச் 1-ல் நடக்க இருந்தது. மே மாதம் 19ம் தேதி பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. 3 மாத இறுதி காலத்திற்குள் நேரடி பணி நியமனம் இருக்கக் கூடாது என அரசின் விதி உள்ளது என்று பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பதிவாளர் நேர்காணல் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. துணை வேந்தரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. தனக்கு ஆதரவான ஒரு குறிப்பிட்ட நபரை பதிவாளராக கொண்டுவர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை அடுத்து பதிவாளர் பதவிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article