ARTICLE AD BOX

அமெரிக்காவில் பல இடங்களில் ஐபிஎம் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை என்றாலும், பணிநீக்கங்கள் காரணமாக சுமார் 9,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cloud Classic என்ற பிரிவு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இது 2013 ஆம் ஆண்டு SoftLayer நிறுவனத்தை வாங்கியதில் இருந்து உருவானதாகும். இந்த Cloud Classic பிரிவில் மட்டும் தோராயமாக 25% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் கன்சல்டிங், கார்ப்பரேட் சமூக பொறுப்புகள், கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், விற்பனை, மற்றும் நிறுவன தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வளவு அளவிலான பணிநீக்கங்களை IBM நிறுவனம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
“Resource Actions” என்ற பெயரில் இந்த நிறுவனத்தில் அடிக்கடி பணிநீக்கங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், வீட்டிலிருந்து அலுவலகம் (RTO) வரவும், ஒரே இடத்தில் பணியாற்றும் கட்டாய விதிகளும் ஊழியர்களை தானாகவே விலக தூண்டும் நோக்கத்தில் அமுல்படுத்தப்படுகின்றன.
நியூயார்க், டெல்லாஸ், ராலி, கலிபோர்னியா உள்ளிட்ட பல பகுதிகளில் பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த வாரம், IBM-ன் Marketing and Communications பிரிவில், Senior VP ஜோனாதன் அடஷெக் தலைமையில் நடந்த கூட்டத்தில் பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.