ARTICLE AD BOX

தமிழக அரசானது பெண்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பயண பேருந்து திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகையைத் திட்டத்தையும் தொடங்கி மாதந்தோறும் பெண்களுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்ப பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த மகளிர் தொகை பெறுவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது சட்டமன்ற கேள்வி நேரத்தில் மனநல குன்றிய குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதால் அவர்களுடைய பெற்றோருக்கு மகளிர் உதவித்தொகை மறுக்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான உதவித்தொகை பெற்றாலும் இனி அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகளிர் உதவித்தொகை பெறும் விதமாக விதிவிலக்கு செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார்.