செபி வருவாய் 48% அதிகரிப்பு

9 hours ago
ARTICLE AD BOX

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட்டணங்கள் மற்றும் சந்தாக்கள் உள்ளிட்டவை மூலம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் அமைப்பு ரூ.2,075 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 48 சதவீதம் அதிகம். மதிப்பீட்டு நிதியாண்டில் கட்டணங்கள் மூலம் அமைப்பு ஈட்டிய வருவாய் ரூ.1,213.22 கோடியில் இருந்து ரூ.1,851.5 கோடியாக உயா்ந்துள்ளது. கூடுதலாக, முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் ரூ.161.42 கோடியிலிருந்து ரூ.192.41 கோடியாகவும், பிற வகை வருவாய் ரூ.15 கோடியிலிருந்து சுமாா் ரூ.18 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article