சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்; இன்று மாலை முதல் சோதனை ஓட்டம்!

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை: சென்னை மெட்ரோ ரயில், 2ம் கட்ட திட்டத்தின் ‘முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம்’ இன்று மாலை நடைபெறவுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் இன்று முதன் முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரை மொதம் 8 கிலோமீட்டர் தொலைவு ஆகும். அதேபோல பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரையில் மொத்தம் ஒன்பது உயர்மட்ட ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்; இன்று மாலை முதல் சோதனை ஓட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article