ARTICLE AD BOX
சென்னை: சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை, உலக மகளிர் தினத்தை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆட்டோ முழுவதும் பிங்க் (இளஞ்சிவப்பு) நிறத்தில் இருக்க வேண்டும், பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும், அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும், ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’என சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் வரும் மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தை ஒட்டி பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுகுறித்து சமுகநலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ இந்த திட்டத்திற்கு பல சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் ஆகியவற்றிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இத்திட்டம் 8ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது’’ என்றனர்.
The post சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் மார்ச் 8ல் அறிமுகம் appeared first on Dinakaran.