சென்னைக்கு விடுதலை.. நீண்ட கால பிரச்சினைக்கு அட்டகாசமான தீர்வு..!

18 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

சென்னைக்கு விடுதலை.. நீண்ட கால பிரச்சினைக்கு அட்டகாசமான தீர்வு..!

News

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமையன்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், ஊரகப் பகுதியில் ரூ.3, 500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும், ரூ.675 கோடி செலவில் 102 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில் முக்கியமான ஒன்று புதிய நகரங்கள் உருவாக்கம். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், மாநிலம் நகரமயமாக்கலின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றை அனுபவித்து வருகிறது.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நகரங்கள அவ்வப்போது விரிவுபடுத்துவதற்கு பதிலாக, ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று நகர்புற திட்டமிடல் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக, சென்னைக்கு அருகில் புதிய நகரம் உருவாக்கப்படும்.

சென்னைக்கு விடுதலை.. நீண்ட கால பிரச்சினைக்கு அட்டகாசமான தீர்வு..!

இந்த புதிய நகரத்தில், ஐடி பூங்காக்கள், நிதி தொழில்நுட்ப வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கும். புதிய நகரம் பொது மற்றும் தனியார் துறை கல்வி மற்றும் சுகாதார வசதிகளையும் வழங்கும் என்று தெரிவித்தார்.

சென்னைக்கு அருகில் 2, 000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குளோபல் சிட்டி என்று அழைக்கப்படும் இந்த திட்டம் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை உறுதியளிக்கிறது. இந்த புதிய நகரம் திட்டத்தை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் மேற்கொள்ளும். எதிர்வரும் நிதியாண்டில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த திட்டம் எங்கு தொடங்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் யாரும் வாய் திறக்கவில்லை.

ஏனென்றால் முந்தைய ஆண்டில் சில சாட்டிலைட் நகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவை இன்னும் நிறைவேறவில்லை. அதனை கருத்தில் கொண்டுதான் அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் மீஞ்சூர், திருமழிசை, செங்கல்பட்டு, மாமல்லபுரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் ஆறு சாட்டிலைட் நகரங்கள் மேம்படுத்துவதற்கான வரைபடங்கைள தயாரிக்கும் திட்டங்களை சிஎம்டிஏ அறிவித்தது.

Read Entire Article