சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் கடத்தப்படுவதாக உளவுத் தகவல் வந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் பேரில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி அன்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த இரண்டு ஆண் பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அரிய வகை வெளிநாட்டு விலங்குகள்:

இந்தியாவிற்கு கடத்துவதற்காக பயணிகளால் வெளிநாட்டு அரியவகை வனவிலங்குகள் கொண்டு செல்லப்படுவதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதனையடுத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போது, பல்வேறு 08 அரிய வகை வன உயிரினங்கள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வன உயிரினங்கள் குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து வனவிலங்கு இனங்களை ஆய்வு செய்தனர்.

Also Read: முதல்வர் ஸ்டாலின் ருத்ரதாண்டவம் ”தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா” உயிரே போனாலும்...

இருவர் கைது:

பின்னர் பயணிகள் இருவரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர், பின்னர் நீதிமன்றக் காவலில் விசார் வைக்கப்பட்டனர்.
வெள்ளி நிற இலை குரங்கு அல்லது வெள்ளி நிற லங்கூர் , மரநாய், பளிங்கு போல்கேட் மற்றும் கிழக்கு சாம்பல் நிற கிப்பன் ஆகிய அரிய வகை வெளிநாட்டு வகை விலங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டு , கைப்பற்றட்டது.

இதையடுத்து, வன அதிகாரிகளின் ஆலோசனையின்படி, உயிருள்ள வெளிநாட்டு இனங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் முறையாக வழங்கப்பட்டு, அவை பிறப்பிடமான நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன.